கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவை முந்தப்போகும் இங்கிலாந்து - ஒரு வாரத்திற்குள் முக்கிய முடிவு


கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவை  முந்தப்போகும் இங்கிலாந்து  - ஒரு வாரத்திற்குள் முக்கிய முடிவு
x
தினத்தந்தி 23 Nov 2020 7:25 AM GMT (Updated: 23 Nov 2020 7:25 AM GMT)

அமெரிக்காவில் தயாராகும் கொரோனா தடுப்பூசிஅமெரிக்கா அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பே, இந்த வாரம் இங்கிலாந்து ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்கிறது.

லண்டன்

பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா  தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளிப்பதற்கு  முன்பே,  இந்த வாரம் பிரிட்டன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்கிறது. 

இதுகுறித்து டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில்  பிரிட்டிஷ் உணவு மற்றும் மருந்துகள்  கட்டுப்பாட்டாளர்கள் பைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின்  முறையான மதிப்பீட்டைத் தொடங்க உள்ளனர் என்றும், டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் அதை நிர்வகிக்க தேசிய சுகாதார சேவைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் அடுத்த மாத துவக்கத்திலேயே தடுப்பூசி போட தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துவிட்டால் இது சாத்தியமே என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தயாராகும் பைசர் மற்றும் பயான்டெக் நிறுவன தடுப்பூசி, அமெரிக்கர்களுக்கு கிடைப்பதற்கு முன்னால், பிரித்தானியர்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. 

அதே நேரத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு தடுப்பூசி தொடர்பாக முடிவெடுக்க, டிசம்பர் 10ஆம் தேதிவாக்கில்தான் கூட உள்ளது. ஆகவே, இப்போதிருக்கும் சூழலை கணக்கிட்டால், ஒப்புதலுக்குப் பின், டிசம்பர் 11 அல்லது 12 வாக்கில்தான் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் திட்டம் துவங்க வாய்ப்புள்ளது. ஆனால், இங்கிலாந்தில் , டிசம்பர் முதல் வாரத்திலேயே தடுப்பூசி போடுதல் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story