உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 24 Nov 2020 12:57 AM GMT (Updated: 24 Nov 2020 12:57 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.11 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,94,83,566 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,11,29,320 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 01 ஆயிரத்து 457 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,69,52,788 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,581 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,27,62,262, உயிரிழப்பு -  2,63,623, குணமடைந்தோர் - 75,40,387
இந்தியா       -    பாதிப்பு - 91,77,641, உயிரிழப்பு -  1,34,251, குணமடைந்தோர் - 86,03,463
பிரேசில்       -    பாதிப்பு - 60,88,004, உயிரிழப்பு -  1,69,541, குணமடைந்தோர் - 54,45,095
பிரான்ஸ்     -     பாதிப்பு - 21,44,660, உயிரிழப்பு -   49,232, குணமடைந்தோர்  - 1,52,592
ரஷியா        -    பாதிப்பு - 21,14,502, உயிரிழப்பு -   36,540, குணமடைந்தோர்  - 16,11,445

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,06,905
இங்கிலாந்து - 15,27,495
இத்தாலி - 14,31,795
அர்ஜென்டினா - 13,74,631
கொலம்பியா - 12,54,979
மெக்சிகோ - 10,41,875
பெரு - 9,50,557
ஜெர்மனி - 9,46,648
போலந்து - 8,76,333
ஈரான்- 8,66,821
தென்னாப்பிரிக்கா - 7,69,759

Next Story