சவுதி அரேபியாவில் குடிமக்களுக்கும் - குடியிருப்பவர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி


சவுதி அரேபியாவில் குடிமக்களுக்கும் - குடியிருப்பவர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 24 Nov 2020 10:00 AM GMT (Updated: 24 Nov 2020 10:00 AM GMT)

குடிமக்கள் மற்றும் அங்கு தங்கி வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கும் சவுதி அரேபியா இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.

அபுதாபி

கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைத்து குடிமக்களுக்கும் - சவுதி அரேபியாவில் குடியிருப்பவர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்யாதவர்களுக்கு எதிர்வரும் மாதங்களில் தடுப்பூசி பிரச்சாரத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சின் உதவி துணை செயலாளர் டாக்டர் அப்துல்லா ஆசிரி கூறி உள்ளார்.அடுத்த ஆண்டு இறுதிக்குள், தடுப்பூசிகள் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு கிடைக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் மேலும் எதிர்பார்க்கிறது.

டாக்டர் ஆசிரி  சவுதி அரேபியா கோவாக்ஸ் வசதி மூலமாகவும், கூட்டமைப்பிற்கு வெளியே உள்ள நிறுவனங்கள் மூலமாகவும் தடுப்பூசிகளைப் பெறும். தடுப்பூசி விநியோகத்திற்கான ஒரு விரிவான திட்டம் வரும் வாரங்களில் தயாராக இருக்கும் என்று மேலும் கூறினார்.

சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மார்ச் மாதத்தில் அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உத்தரவிட்டு இருந்தார்.


Next Story