உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க டொனால்டு டிரம்ப் சம்மதம் இனி பைடன் என்ன செய்வார்...? + "||" + Biden unveils his administration as Trump's firewall crumbles

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க டொனால்டு டிரம்ப் சம்மதம் இனி பைடன் என்ன செய்வார்...?

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க  டொனால்டு டிரம்ப் சம்மதம் இனி பைடன் என்ன செய்வார்...?
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க டொனால்டு டிரம்ப் சம்மதம் இனி பைடன் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?
வாஷிங்டன்

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் பதவியேற்க இருப்பதை மறைமுகமாக சம்மதம் தெரிவித்து உள்ளார் டிரம்ப். புதிய அதிபர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி பொறுப்பேற்பதுதான் அமெரிக்க மரபு. பொறுப்புகளை ஜோ பைடனிடம் ஒப்படைக்க டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க தேர்தல் மரபுப்படி, நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் சான்றளிக்கப்படவேண்டும் அல்லது ஆவணப்படுத்தப்படவேண்டும். அது நேற்று நடந்து உள்ளது.அடுத்ததாக பொறுப்புகள் ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படவேண்டும். அப்படி ஒப்படைக்கப்பட்டால்தான் அரசின் நிதியை பைடன் எடுத்து நாட்டுக்காக பயன்படுத்த முடியும்.

இந்த பொறுப்புக்களை அடுத்த அதிபரிடம் முறைப்படி ஒப்படைக்கவேண்டியவர், அமெரிக்காவின் பொது சேவைகள் நிர்வாக தலைவரான எமிலி மர்பி என்பவர்.இவர் டிரம்பால் பதவியில் அமர்த்தப்பட்டவர். ஆகவே, டிரம்ப் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்தபோது, எமிலியும் பைடனிடம் பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்தார். இந்தநிலையில், நேற்று அவர் முறைப்படி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதி பொறுப்புகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

பைடனின் குழு இந்த முடிவை வரவேற்று உள்ளது, 

இது குறித்து வெளியிட்ட  அறிக்கையில் "சுமூகமான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றத்தை மேற்கொள்ள தேவையான ஆதாரங்களையும் ஆதரவையும் வழங்கும்

தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் நமது பொருளாதாரம் மீண்டும் பாதையில் செல்வது உள்ளிட்ட நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க இன்றைய முடிவு அவசியமான ஒரு நடவடிக்கையாகும். இந்த இறுதி முடிவு கூட்டாட்சி அமைப்புகளுடன் மாற்றம் செயல்முறையை முறையாகத் தொடங்குவதற்கான ஒரு உறுதியான நிர்வாக நடவடிக்கையாகும்.என்று கூறியுள்ளார்.

முன்னர் செயல்பட மறுத்தது குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட மர்பி, அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களால் பெறப்பட்ட பிடனுக்கு எழுதிய கடிதத்தில், "ஊடக அறிக்கைகள் மற்றும் தூண்டுதல்களுக்கு மாறாக, எனது முடிவு பயத்திலிருந்தோ அல்லது ஆதரவானதாலோ எடுக்கப்படவில்லை" என்று கூறி உள்ளார்.

இனி, பைடன் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? பைடன் நிர்வாகம், அரசு நிதி, அலுவலகம் மற்றும் அலுவர்களை கட்டுப்படுத்த முடியும்.நிர்வாக செலவுகளுக்காக 36 லட்சம்   டாலர்கள், புதிதாக பொறுப்பேற்றது தொடர்பாக நடைபெற இருக்கும் நிகழ்வுகளுக்காக ஒரு 10 லட்சம்  டாலர்கள் பைடன் செலவு செய்யலாம்.

 முக்கிய விஷயம் அதை நிர்வகிக்கும் உரிமை இனி பைடனுடயது என்பதுதான் முக்கியம், அதாவது இனி பைடன், ஒரு அதிபராக ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ பேட்டியளிக்கலாம். பைடன்-  ஹாரிஸ் அணிக்கு, அதிகாரிகள் இனி தேவையான அதிகாரப்பூர்வ தகவல்களை அளிப்பார்கள். அதிகாரத்தில் பைடன் - ஹாரிஸ் அணி குறுக்கிடும். கொரோனா வைரஸ் தொடர்பான முடிவுகள் தொடர்பாக  இனி சுகாதார அணியுடன் பைடன் தொடர்புகொள்வார். அலுவலகத்தையும் பைடன் - ஹாரிஸ் அணி இனி பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேல்,எப்பிஐ இனி ஜோ பைடன் சொல்படி கேட்கும். 

தொடர்புடைய செய்திகள்

1. சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் - அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
2. முக்கிய உளவு தகவல்களை டிரம்புக்கு வழங்கக் கூடாது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந்தேதி பதவியேற்றார்.
3. டிரம்பின் விசா கட்டுப்பாடு வாபஸ்: அமெரிக்காவில் இனி கணவன், மனைவி இருவருக்கும் வேலை; ஜோ பைடன் அதிரடியால் இந்தியர்கள் மகிழ்ச்சி
அமெரிக்காவில் டிரம்ப் பிறப்பித்த விசா கட்டுப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இனி கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கலாம். ஜோ பைடனின் இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார்.
5. வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்
அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ஜோ பைடனை நியமனம் செய்து இருந்தார்.