பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம் என அதிகம் பேர் வாக்களித்த ஆன் லைன் கருத்து கணிப்பை சுட்டிகாட்டும் டிரம்ப்


பைடன் வெற்றியை  ஒப்புக்கொள்ளவேண்டாம் என அதிகம்  பேர் வாக்களித்த ஆன் லைன் கருத்து கணிப்பை  சுட்டிகாட்டும் டிரம்ப்
x
தினத்தந்தி 25 Nov 2020 12:15 PM GMT (Updated: 25 Nov 2020 12:15 PM GMT)

பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம் என 98.9% பேர் வாக்களித்த ஆன் லைன் கருத்து கணிப்பை டிரம்ப் சுட்டி காட்டி உள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில்  டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருவதால், அவர் இப்போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை மறுக்க ஆன்லைன் கருத்துக்கணிப்புகளை மேற்கோள் காட்டி வருகிறார்.

98.9 சதவீத பார்வையாளர்கள் அவர் தேர்தலை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை என்று டிரம்ப் ஒரு ஆன்லைன்  கருத்துக் கணிப்பை டுவீட் செய்துள்ளார்.

அதிபர் டிரம்ப் பைடனின் வெற்றியை  ஒப்புக் கொள்ள வேண்டுமா?  என்ற இந்த கருத்து கணிப்பில் 192,774 பேர் வாக்களித்ததாக கூறிய டிரம்ப்  ‘கருத்துக் கணிப்பின்’ முடிவுகளின்படி, 98.9 சதவீதம்  அல்லது 190,593 பேர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளவில்லை, அதே நேரத்தில் 1.1 சதவீதம்  அல்லது 2,181 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். நம் நாட்டின் நன்மைக்காக, நாம் வெற்றிபெற வேண்டும்!  என  டிரம்ப் டுவீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், உலக அரங்கில் அமெரிக்கா மீண்டும் "வழிநடத்தத் தயாராக" இருப்பதாகக் கூறி உள்ளார்.


Next Story