உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6.19 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6.19 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 28 Nov 2020 1:03 AM GMT (Updated: 28 Nov 2020 1:03 AM GMT)

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6.19 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  தடுப்பூசிகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. 

இதனால், தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.  ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தொற்றின் 2-ஆம் கட்ட அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மீண்டும் சில நாடுகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6.19- கோடியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை   4,27,66,954- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால்  14,48,183- பலியகியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story