உலக செய்திகள்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி கொலை: பாரசீக வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா + "||" + US sends aircraft carrier, warships to Persian Gulf : Reports

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி கொலை: பாரசீக வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி கொலை: பாரசீக வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா
அமெரிக்கா அதன் போர் கப்பல்களை பாரசீக வளைகுடாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே, தலைநகர் தெஹ்ரானுக்கு கிழக்கே அப்சார்ட் நகரரில் அந்நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிசாதே காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த பக்ரிசாதேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நிலையில் அவர்  ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாக்குதலில் பக்ரிசாதேவின் மெய்காப்பாளர்களும் படுகாயம் அடைந்தனர். ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராக இருந்த ஈரானின் மிகவும் புகழ்பெற்ற அணு விஞ்ஞானி பக்ரிசாதே ஆவார்.

இந்த சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாதம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா அதன் போர் கப்பல்களை பாரசீக வளைகுடாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு ஆதரவாக போர் கப்பலகள் அனுப்பப்படுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஈரான் விஞ்ஞானி கொல்லப்படுவதற்கு முன்பே போர் கப்பலை அனுப்பும் முடிவை அமெரிக்க எடுத்துவிட்டதாகவும், ஆனாலும் இது ஈரானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக சிஎன்என் கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா, ஈரான், சீன கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி; அமெரிக்கா என்ன சொல்கிறது?
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷியா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்த மாதம் மத்தியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன.
2. அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த தயார்; ஈரான் சொல்கிறது
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
3. ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட்
ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
4. அமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்காவும் ஈரானும் எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
5. சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு மாநாடு
ஈரானின் சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே வரும் 14 ஆம் தேதி முத்தரப்பு மாநாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.