உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி + "||" + At least 13 dead in fiery Pakistan road crash: police

பாகிஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி
பாகிஸ்தானில் பஸ்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி பலியாகினர்.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நராங் மந்தி என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எதிரில் வரும் வாகனம் தெரியாத அளவுக்கு சாலையில் பனி மூட்டமாக இருந்தது. 

இதன் காரணமாக இந்த வேன் சாலையில் எதிர்திசையில் வந்த ஒரு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வேன் மற்றும் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி இருந்தன. மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் மோசமான சாலைகள், மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் போன்றவைகள் ஆபத்தான போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பொருளாதாரசரிவு:பாகிஸ்தான் மிகப்பெரிய பூங்காவை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்
பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. குஜராத்தில் கோர விபத்து: தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி ;பிரதமர் மோடி இரங்கல்
குஜராத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 15 பேர் பலி ஆனார்கள்.பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
3. ஹூப்ளி அருகே : கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து 10 பெண்கள் உள்பட 11 பேர் பலி
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
4. பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன -ராணுவ தலைமை தளபதி
பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன என ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறினார்.
5. பாகிஸ்தான் மின் தடை: அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகள் இடை நீக்கம்
மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தான் முழுவதும் இருளில் மூழ்கியது.