உலக செய்திகள்

ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி பலி + "||" + Iranian Commander Killed In Airstrike At Iraq-Syria Border

ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி பலி

ஈராக்கில்  நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி  பலி
ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்தாத்

ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர்  தெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.

இந்த நிலையில் தலைமை அணு விஞ்ஞானி கொலை செய்யப்பட்ட  பரபரப்பு அடங்குவதற்குள்  ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அவர் ஈராக்-சிரியா எல்லையில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,இந்த தாக்குதலில் அவருடன் மேலும் 3 பேர் உயிரிழந்ததாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட பகுதி  ஒரு காலகட்டத்தில் ஐ.எஸ் அமைப்பின் கீழ் இருந்ததாகும், ஆனால் தற்போது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.

அணு விஞ்ஞானியின் படுகொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் தலைவர்கள் சூளுரைத்த சில மணி நேரங்களிலேயே, ஈராக்கில் இன்னொரு முக்கிய ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் இந்த சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
2. ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட்
ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
3. அமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்காவும் ஈரானும் எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
4. சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு மாநாடு
ஈரானின் சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே வரும் 14 ஆம் தேதி முத்தரப்பு மாநாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்க மொராக்கோ சம்மதம்
மொராக்கோ இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.