உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.48 கோடியாக அதிகரித்துள்ளது.
ஜெனீவா,
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,47,97,630 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,48,97,428 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 98 ஆயிரத்து 102 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,84,02,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,093 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 1,42,96,386, உயிரிழப்பு - 2,79,698, குணமடைந்தோர் - 84,43,850
இந்தியா - பாதிப்பு - 95,33,471, உயிரிழப்பு - 1,38,657, குணமடைந்தோர் - 89,70,104
பிரேசில் - பாதிப்பு - 64,36,650, உயிரிழப்பு - 1,74,531, குணமடைந்தோர் - 56,98,353
சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.