உலக செய்திகள்

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை + "||" + Baby born from embryo that had been frozen for 27 years

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை ஒன்று பிறந்தது.
நாஷ்வில்லே, 

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு பற்றி உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடினார்கள். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாம். இந்த தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3. 


இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாம். இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைக்கு அவரும், அவரது கணவர் டினாவும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

இதுபற்றி பென் கிப்சன் கூறும்போது, “நாங்கள் நிலாவுக்கு மேலே இருப்பது போல மகிழ்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்” என்று குறிப்பிட்டார்.

பென் கிப்சன் ஒரு ஆசிரியை. இவரது கணவர் டினா சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
2. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
3. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார்.
4. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் மறைவு
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் காலமானார்.
5. வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்
அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ஜோ பைடனை நியமனம் செய்து இருந்தார்.