இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது - சர்வதேச நிதியம் தகவல்


இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது - சர்வதேச நிதியம் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2020 12:28 AM GMT (Updated: 4 Dec 2020 12:28 AM GMT)

இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக சர்வதேச நிதியம் தகவல் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், இந்திய பொருளாதாரத்திலும் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.

குறிப்பாக செப்டம்பர் காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டிருப்பதுடன், உற்பத்தி அதிகரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதம் குறைந்த சுருக்கத்துக்கு உதவியது மற்றும் சிறந்த நுகர்வோர் தேவையை மேலும் மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை அளித்திருக்கிறது.

இதை சர்வதேச நிதியமும் உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து நிதியத்தின் செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறுகையில், ‘இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு மேலும் உதவும் வகையில் தற்போதுள்ள ஆதரவு திட்டங்களை விரைவாக செயல்படுத்த இந்திய நிர்வாகம் முன்னுரிமை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

Next Story