கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் பின்லாந்து அரசு அறிவிப்பு


கோப்புக்காட்சி  நன்றி outlookofindia
x
கோப்புக்காட்சி நன்றி outlookofindia
தினத்தந்தி 4 Dec 2020 1:07 AM GMT (Updated: 4 Dec 2020 1:07 AM GMT)

மருத்துவ பணியாளர்கள், முதியோர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து போடப்படும்.

ஹெல்சிங்கி,

பின்லாந்து நாட்டில் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது:-

பின்லாந்து மக்களை உரிமம் பெற்ற கொரோனா தடுப்பூசி மூலம் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோ, அவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல் தடுப்பூசி கிடைத்து விடும். அதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

மருத்துவ பணியாளர்கள், முதியோர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து போடப்படும்.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story