உலக செய்திகள்

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவிப்பு + "||" + People in France will be given the free corona vaccine - Prime Minister Jean Castex announces

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவித்துள்ளார்.
பாரீஸ்,

உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் சார்பில் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. 

சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த நிலையில் பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, “பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக வருகிற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்
இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .
2. பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை
பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3. பிரான்ஸ்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி; ஒருவர் காயம்
பிரான்சில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
4. பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு சிறைத்தண்டனை
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
5. பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 62 போலீசார் படுகாயம்
பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 62 போலீசார் படுகாயம் அடைந்தனர்.