சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து படைகளையும் வாபஸ் பெற டிரம்ப் உத்தரவு


சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து படைகளையும் வாபஸ் பெற டிரம்ப் உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2020 12:40 AM GMT (Updated: 5 Dec 2020 12:40 AM GMT)

சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் வாபஸ் பெறுவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  இந்த நிலையில், அதிபராக நீடித்து வரும் டிரம்ப் பல முடிவுகளை எடுத்து வருகிறார்.

இதன்படி, வருகிற 2021ம் ஆண்டு தொடக்கத்தில் சோமாலியா நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் வாபஸ் பெற்று கொள்ளும்படி, அந்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்க படை தலைவர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையில் மாற்றமில்லை.  நம்முடைய சொந்த நிலத்தில் அச்சுறுத்தலாக இருக்கும், வன்முறை ஏற்படுத்த கூடிய பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து நாம் செயலிழக்க செய்வோம் என்றும் இதுபற்றி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சொந்த நிலத்திற்கு அச்சுறுத்தலுக்கான அடையாளங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இருப்பது தெரியவருமெனில், சோமாலியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தகுதியை அமெரிக்கா திரும்ப பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story