ரூ.664 கோடி மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்


ரூ.664 கோடி மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
x
தினத்தந்தி 5 Dec 2020 2:21 AM GMT (Updated: 5 Dec 2020 2:21 AM GMT)

ரூ.664 கோடி மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், தெற்காசியா பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக இந்தியா இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனை மேம்படுத்தும் வகையில், சி 130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களுக்குத் தேவையான பழுது பார்க்கும் கருவிகள். சி.ஏ.டி மற்றும் பி.ஏ.டி., எனப்படும் சிறிய ரக வெடிபொருள் சாதனங்கள், விமானங்களுக்கு எச்சரிக்கை தரும் நவீன ரேடார்கள், இரவு நேர பைனாகுலர்கள், ஜி.பி.எஸ்., உள்ளிட்டவைகளை சுமார் ரூ.664 கோடிக்கு   (90 மில்லியன் டாலர் )விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விற்பனை அமெரிக்க-இந்தியா உறவை வலுப்படுத்தவும், ஒரு பெரிய கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பை ஆதரிக்கும் என்று பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு  ஒத்துழைப்பு நிறுவனம் (டி.எஸ்.சி.ஏ) தெரிவித்துள்ளது. 

Next Story