பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு சிறைத்தண்டனை + "||" + French surgeon jailed for 15 years in child sex abuse case
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு சிறைத்தண்டனை
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பாரீஸ்
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த 70 வயது டாக்டருக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்போது 4 வழக்குகளில் மட்டும் அவர் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளது.ஆனால் 1986 முதல் 2014 வரை சுமார் 312 சிறுவர்களை அவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார் என்று தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பு சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது, டாக்டருக்கு சொந்தமான டைரிகளைக் கண்டுபிடித்தனர், அதில் அவர் குழந்தைகளுடன் தமக்கிருக்கும் பாலியல் உணர்வுகளை காட்சிகளாக பதிவு செய்திருந்தார்.ஆனால் அது ஒன்றும் தவறில்லை எனவும், ஒருவகையான உணர்வு மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை காலகட்டத்தில் ஒப்புக்கொண்ட மருத்துவர் ஜோயல் சமூகத்தில் மதிப்புமிக்க டாக்டராக வலம் வந்தவர் என கூறப்படுகிறது.தற்போது அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், மேலும் அவர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து எவ்வித சலுகையும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.