நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 2 இந்தியர்கள் கடத்தல்


நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 2 இந்தியர்கள் கடத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2020 4:25 AM GMT (Updated: 14 Dec 2020 4:25 AM GMT)

நைஜீரியாவில் மருந்துத் துறையில் வேலைபார்க்கும் 2 இந்திய தொழிலாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.

லாகோஸ்,

நைஜீரியாவில்,  மருந்துத் துறையில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தின் தலைநகரான இபாடானில் நேற்று இரவு  வேலை முடிந்து 2 இந்திய தொழிலாளர்கள் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது  துப்பாக்கியுடன் வாகனங்களில் வந்த  மர்ம ஆசாமிகள் இரண்டு இந்திய தொழிலாளர்களையும்  துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இது குறித்து ஓயோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒலுக்பெங்கா படேய் கூறும் போது  இந்திய தொழிலாளர்களை  கண்டுபிடித்து மீட்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் படை  ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது என கூறினார். 

வெளிநாட்டினர் விழிப்புடன் இருக்குமாறு தென்மேற்கு நைஜீரியா  போலீசார் எச்சரித்து உள்ளனர். அனைத்து வெளிநாட்டவர்களும் விழிப்புடன் இருக்கவும் குறிப்பாக இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்களை சுற்றி ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடமாட்டம்  இருந்தால் அதுகுறித்து போலீசாருக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர்.


Next Story