உலக செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் 9 பேர் உயிரிழப்பு + "||" + Hospital fire kills 9 Covid patients at ICU in Turkey

மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் 9 பேர் உயிரிழப்பு

மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் 9 பேர் உயிரிழப்பு
துருக்கியில் மருத்துவமனையில் சிக்கி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்,
 
துருக்கி நாட்டில் துருக்கின் ஹாசியண்டீப் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழாயில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் தீவிர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர தீ விபத்தில் மருத்துமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளிகள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 9 கொரோனா நோயாளிகள் உடல்கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிபத்தால் மருத்துவமனைக்குள் சிக்கிய நோயாளிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா, மராட்டியம் உள்பட ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
கேரளா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
2. கேரளாவில் மேலும் 4,505- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,505- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு; சீரம் நிறுவன தலைவர் தகவல்
தீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
4. வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் எந்திரம், பஞ்சு எரிந்து நாசம்
வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள எந்திரம், பஞ்சு எரிந்து நாசம் ஆனது.
5. கேரளாவில் இன்று புதிதாக 3,272- பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று புதிதாக 3,272- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.