உலக செய்திகள்

நைஜீரியாவில் சாலை விபத்து: 10 பேர் பலி + "||" + Road accident in Nigeria: 10 killed

நைஜீரியாவில் சாலை விபத்து: 10 பேர் பலி

நைஜீரியாவில் சாலை விபத்து:  10 பேர் பலி
நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் வாகனங்கள் மோதி தீப்பிடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
லாகோஸ்,

நைஜீரியா நாட்டின் மேற்கே அமைந்த குவாரா மாநிலத்தில் இலோரின் என்ற பகுதியருகே, இடோபியான்-இலோரின் சாலையில் சென்று கொண்டிருந்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.  இதில் 27 பேர் சிக்கி கொண்டனர்.  10 பேர் உயிரிழந்து விட்டனர்.  அவர்களில் 9 பேர் அடையாளம் தெரியாத அளவில் எரிந்து உள்ளனர்.  16 பேருக்கு பல்வேறு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.  ஒருவர் காயம் எதுவுமின்றி தப்பி உள்ளார்.

இதுபற்றி குவாராவின் மத்திய சாலை பாதுகாப்பு படையின் பிரிவு அதிகாரி ஜோனாதன் ஓவோயேட் கூறும்பொழுது, வேக கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாகனங்கள் சென்றதும் மற்றும் தவறான முறையில் வாகனங்களை கடந்து செல்ல முயன்றதும் விபத்து ஏற்பட வழிவகுத்து உள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டியதால் விபத்து 3 பேர் பலி
மடியில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காரை ஓட்டியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
2. சிதம்பரம் அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி - 22 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அரசு குளிர்சாதன சொகுசுப் பஸ்ஸும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3. சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
4. விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி
விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
5. தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.