அமெரிக்காவில் புது வருடத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு


அமெரிக்காவில் புது வருடத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 1 Jan 2021 10:29 PM GMT (Updated: 1 Jan 2021 10:29 PM GMT)

அமெரிக்காவில் புது வருட தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக உயர்வடைந்துள்ளது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றால் 8.3 கோடி பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  இவற்றில் அதிகம் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டுள்ளது.

அந்நாட்டில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில், புது வருட பிறப்பினை முன்னிட்டு அமெரிக்காவில் வியாழ கிழமையன்று நிலவரப்படி, 1.25 லட்சம் பேர் ஒரே நாளில் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனால், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தொட்டுள்ளது.

இதேபோன்று அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதில், வியாழ கிழமை கணக்குப்படி, 3,460 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.  அதற்கு முந்தின நாள், இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவாக 3,700 பேர் உயிரிழந்து இருந்தனர்.  அந்த எண்ணிக்கையை விட ஒரு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இதனால் அமெரிக்காவில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3.46 லட்சம் ஆக உயர்வடைந்து உள்ளது.  உலக அளவில் இதுவரை 18 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.  இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story