உலக செய்திகள்

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: 3 பேர் உயிரிழப்பு + "||" + Plane crashes into house, catches fire in US: 3 killed

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது:  3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்குப்பிறகு டெட்ராய்ட்டின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் அங்கு உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ வீட்டினுள்ளும் பரவியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம் விழுந்த வீட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 12 இந்தியர்கள் பலியான பஸ் விபத்து வழக்கு: டிரைவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ஒரு ஆண்டாக குறைப்பு துபாய் கோர்ட்டு உத்தரவு
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள்.
2. பவானி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதி பெண் பலி; 2 மகன்கள்-2 மகள்கள் காயம்
பவானி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதி பெண் பலியானார். இந்த விபத்தில் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் காயம் அடைந்தனர்.
3. இந்தியாவுக்கு செல்ல கொரோனா பரிசோதனை கட்டாயம்: அமீரக மருத்துவ நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
இந்தியாவுக்கு செல்ல குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக இருப்பதால் அமீரக மருத்துவ நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
4. புழல் அருகே பரிதாபம்: கன்டெய்னர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
புழல் அருகே கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
5. மின்சார ரெயில் மோதி பெண் பலி
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அல்லிராணி மீது மோதியது. இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.