எட்டு சீன மொபைல் செயலிகளுக்கு தடை: அமெரிக்காவின் மிரட்டலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு -சீனா கண்டனம்


எட்டு சீன மொபைல் செயலிகளுக்கு தடை: அமெரிக்காவின் மிரட்டலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு -சீனா கண்டனம்
x
தினத்தந்தி 6 Jan 2021 11:01 AM GMT (Updated: 6 Jan 2021 11:01 AM GMT)

எட்டு சீன மொபைல் செயலிகளை தடையை தொடர்ந்து சீனா அமெரிக்காவின் மிரட்டலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என குற்றம்சாட்டி உள்ளது

பீஜிங்

ஆண்ட் குழுமத்தின் அலிபா மொபைல் கட்டண பயன்பாடு உள்பட எட்டு சீன மொபைல் செயலிகளை   தடைசெய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்  உத்தரவை தொடந்து  சீனா அமெரிக்காவின் மிரட்டலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என கூறி உள்ளது.

சீனாவின் எட்டு மொபைல் செயலிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்தார். இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறும் போது அமெரிக்காவின்  இந்த நடவடிக்கை  மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார்.

மேலும் டிரம்ப் உத்தரவைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட செயலி நிறுவனங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், அமெரிக்கா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடக்குவதாகவும் கூறினார்.

டிரம்பின் மொபைல் செயலிகள் தடை உத்தரவு 45 நாட்களில் நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது  ஜனவரி 20 ம் தேதி புதிதாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவி ஏற்ற சில வாரங்களுக்கு பிறகு.

இது குறித்து  ஒரு மூத்த நிர்வாக அதிகாரி, இந்த உத்தரவும் அதன் செயல்பாடு குறித்தும்  பைடன் நிர்வாகத்துடன்  விவாதிக்கப்படவில்லை என கூறி உள்ளார்.

Next Story