உலக செய்திகள்

ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட் + "||" + Iraq issues arrest warrant for Trump over Soleimani killing

ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட்

ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட்
ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாக்தாத்

கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பயங்கரவாதியாக அறிவித்தது.

மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, ஈரான் நாட்டு நீதிமன்றம் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக டிரம்பிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக ஈராக்கின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலை விசாரிக்கும்  பாக்தாத்தின் விசாரணை நீதிமன்றம் இந்த கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா, ஈரான், சீன கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி; அமெரிக்கா என்ன சொல்கிறது?
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷியா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்த மாதம் மத்தியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன.
2. அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த தயார்; ஈரான் சொல்கிறது
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
3. அமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்காவும் ஈரானும் எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
4. சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு மாநாடு
ஈரானின் சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே வரும் 14 ஆம் தேதி முத்தரப்பு மாநாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி பலி
ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.