"அழகிய காட்சி" அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் சீனா கிண்டல்


அழகிய காட்சி அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் சீனா கிண்டல்
x
தினத்தந்தி 7 Jan 2021 5:19 PM GMT (Updated: 7 Jan 2021 5:19 PM GMT)

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை சீனா கேலியும், கிண்டலும் செய்துள்ளது.

பீஜிங்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அறிவிக்கும் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவரும் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்னால்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற போரட்டத்துக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சீனா  அரசின் நாளிதழான குளோபல் டைம்சின் இணைய பக்கங்களில், அமெரிக்க நாடாளுமன்ற கலவர காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அவற்றுக்கு அருகில் 2019 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்போது அந்த போராட்டக்காட்சிகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அழகான காட்சி என தமது இணைய பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை மேற்கொள் காட்டி உள்ள குளோபல் டைம்ஸ், இப்போதும் இந்த காட்சிகளை பெலோசி அதே போல வர்ணிப்பாரா என்று கேள்வி எழுப்பி உள்ளது. 

Next Story