மும்பை பயங்கரவாத தாக்குதல்: மூளையாக செயல்பட்ட லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை- பாகிஸ்தான் நீதிமன்றம்


மும்பை பயங்கரவாத தாக்குதல்:  மூளையாக செயல்பட்ட லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை- பாகிஸ்தான் நீதிமன்றம்
x
தினத்தந்தி 8 Jan 2021 1:11 PM GMT (Updated: 8 Jan 2021 1:11 PM GMT)

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம்15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உள்ளது.

லாகூர்: 

மும்பை பயங்கரவாத தாக்குதல்  வழக்கில் மூளையாக செயல்பட்ட  லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில் 2015 முதல் ஜாமீனில்  உள்ள  61 வயதான பயங்கரவாதி லக்வி, பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத எதிர்ப்புத் அமைப்பால் (சி.டி.டி) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நீதிபதி எஜாஸ் அஹ்மத் பட்டர் 3 வழக்குகளில் லக்விக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடும்  சிறைத்தண்டனை விதித்தார்.  பாகிஸ்தான் பணம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கபட்டது. அதை  கட்ட தவறினால் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என கூறினார்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தான்  பொய்யாக குற்றம்சாட்டப்பட்டதாக  லக்வி  கெஞ்சினார்.

Next Story