உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 8 Jan 2021 8:00 PM GMT (Updated: 8 Jan 2021 7:34 PM GMT)

பிரான்ஸ் நடத்திய விமான வான்வழி தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற விருந்தினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மாலி அரசு மறுத்துள்ளது.

* நியூசிலாந்து நாட்டில் ஒரு அரிய நிகழ்வாக, சுறா தாக்குதலுக்கு ஆளாகி இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டின் வடக்கு தீவில் உள்ள வைஹி கடற்கரையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு சுறா தாக்குதலுக்கு ஆளாகி ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

* ரஷியாவில் உறைந்து போன அருவியில் இருந்து நேற்று முன்தினம் பனிக்கட்டி இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்சட்கா தீபகற்பத்தில் நேரிட்ட இந்த விபத்தில் மீட்பு பணிகளை கவனிக்க மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் ஓட்டல் தொழிலாளி ஒருவர் இங்கிலாந்தில் உருவான உரு மாறிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அந்த நகரத்தில் 3 நாள் ஊரடங்கு, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* பிரான்ஸ் நடத்திய விமான வான்வழி தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற விருந்தினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மாலி அரசு மறுத்துள்ளது.

* ரோட் தீவின் கவர்னர் ரெய்மாண்டோவை அமெரிக்க வர்த்தக மந்திரி பதவிக்கு, அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்.

* ஆசியாவில் சீனா பல்வேறு ரெயில்வே, துறைமுக திட்டங்களை கட்டமைக்க பின்னணியில் இருந்த வங்கி தலைவர் ஹூ ஹூய்பாங், ஊழல் வழக்கில் சிக்கி விட்டார். அந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர் சாகும் வரையில் சிறை தண்டனை விதிக்க அங்குள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story