கொரோனா தோற்றம் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார்: சீனா


கொரோனா தோற்றம் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார்: சீனா
x
தினத்தந்தி 10 Jan 2021 12:35 AM GMT (Updated: 10 Jan 2021 12:35 AM GMT)

சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருக்கும் நிலையில், அந்த வைரசின் தோற்றம் குறித்து அங்கு சென்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 இந்த விசாரணைக்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அமைத்து உள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் பட்டியலை சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு அளித்துள்ளது. எனினும், இந்தக் குழுவினரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதை சீனா இழுத்தடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாஸ் அண்மையில் அதிருப்தி தெரிவித்தார். 

இந்த நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. நிபுணர்குழுவை உகான் நகருக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள சீனா, ஆய்வுக்குழுவினர் எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

Next Story