உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி + "||" + Roadside Bomb, Airstrike Kill 15 People in Afghanistan

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அதேசமயம் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிம்ருஸ் மாகாணம் காஷ் ரோடு என்ற மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தலீபான் பயங்கரவாதிகள் குறிவைத்து வான் தாக்குதல் நடத்தியது.‌

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த வான் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இதனிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பில் மக்கள் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஷியா வடான் என்பவர் உள்பட 3 பேர் பலியாகினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த குண்டுவெடிப்பில் அரசு செய்தித் தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
2. ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்கள்: போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் பலி
9 ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் பலியாகினர்,
3. ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை ; இன்றும் ஒரு பத்திரிகையாளர் கொலை
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படு உள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.