உலக செய்திகள்

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed to Portuguese president

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி
போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
மாட்ரிட்,

போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதியாக மார்சிலோ ரெபெலோ டிசோசா இருந்து வருகிறார்.  வருகிற 24ந்தேதி அந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.  சமீபத்தில் 72 வயது பூர்த்தியான டிசோசா இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.  இதன்பின்னர் நடந்த ஆன்டிபாடி பரிசோதனை முடிவிலும் பாதிப்பு இல்லை என முடிவானது.

ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றால் டிசோசா பாதிக்கப்பட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.  இதனை அவரது அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதி செய்துள்ளது.

இதனை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் அவர் கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மத்திய அரசு
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
2. 2வது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
குஜராத்தில் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக அதிகரித்துள்ளது.