உலக செய்திகள்

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனாவில் புதிய சட்டம் அமல் + "||" + New law comes into force in China to overcome US sanctions

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனாவில் புதிய சட்டம் அமல்

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனாவில் புதிய சட்டம் அமல்
அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது.
பீஜிங்,

சீனாவுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.‌ குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார்.

இதையடுத்து பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. 

இதுகுறித்து சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. சீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு தடை : இங்கிலாந்து கடும் கண்டனம்
சீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
3. லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது; சீனா தகவல்
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
4. சீன கடல் பகுதியில் கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ந்தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு தகவல்
சீன கடல் பகுதியில் பல மாதங்களாக கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ந்தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. "சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது" - அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம்
சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது எனக் குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்கா, இந்தியா - சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.