உலக செய்திகள்

கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற பெண் + "||" + Canadian Woman Caught Walking Her Husband on a Leash to Evade Curfew Rules

கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற பெண்

கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற பெண்
லாக்டவுனில் விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், போலீசாரிடம் வசமாக சிக்கினார்.
கனடா,

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த போலீசார் இது குறித்து விசாரணை அவரிடம் விசாரணை நடத்தினர்.

நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று கூலாக பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.44 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.