டிரம்பிற்கு யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை


டிரம்பிற்கு  யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை
x
தினத்தந்தி 13 Jan 2021 3:07 PM GMT (Updated: 13 Jan 2021 3:08 PM GMT)

டிரம்பின் சேனலுக்கு யூட்யூப் கட்டுப்பாடு விதித்து உள்ளது. 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை விதித்து உள்ளது

வாஷிங்டன்

யூட்யூப் சமூக வலைதள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் வீடியோக்கள் வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் யூட்யூப்  பக்கத்தில் புதிய வீடியோக்களை 7 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை யூட்யூப் நிறுவனம் விதித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பதிவேற்றிய காணொளி வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் நிறுவனம் கருதுகிறது.

அந்த வீடியோக்கள்  யூட்யூப் கொள்கை விதிகளை மீறும் வகையில் இருப்பதால் டிரம்பின் பக்கத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் புதிய காணொளிகளை பதிவேற்றவும், லைவ்-ஸ்ட்ரீமிங் எனப்படும் வீடியோக்களை  ஒளிபரப்பரவும் அடுத்த ஏழு நாட்களுக்கு முடியாது. இந்த நாட்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story