கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு நேபாள அரசு ஒப்புதல்


கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு நேபாள அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 15 Jan 2021 11:09 AM GMT (Updated: 15 Jan 2021 11:09 AM GMT)

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

காத்மாண்டு,

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா செனக்கா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. புனேவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியா அண்மையில் ஒப்புதல் அளித்தது. 

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி  நாளை முதல் மருத்துவ பணியாளர்களுக்குப் போடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story