கொரோனா பாதிப்பு: பாகிஸ்தானியர்களுக்கு சீனா தற்காலிக பயண தடை


கொரோனா பாதிப்பு:  பாகிஸ்தானியர்களுக்கு சீனா தற்காலிக பயண தடை
x
தினத்தந்தி 15 Jan 2021 6:10 PM GMT (Updated: 15 Jan 2021 6:10 PM GMT)

பாகிஸ்தானியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதனால் அந்நாட்டு பயணிகளுக்கு சீனா தற்காலிக பயண தடை விதித்துள்ளது.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமான பயணிகள் தங்களுடன் கொரோனா தொற்றில்லா அறிக்கையுடன் கிளம்பியுள்ளனர்.  ஆனால் அவர்கள் சீனா வந்தவுடன் பயணிகளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பயணிகளுக்கு சீனா தற்காலிக பயண தடை விதித்துள்ளது.  பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களையும் சீனாவுக்கு வர 3 வாரங்களுக்கு சீன அரசு தடை விதித்து உள்ளது.

கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில், சீனாவில் நேற்று அதிக அளவாக 144 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  சீனாவின் வடகிழக்கில் இதனால் 2.8 கோடி பேர் ஊரடங்கில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story