உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி: பயண கட்டுப்பாடுகளை அதிகரித்தது இங்கிலாந்து அரசு


உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி: பயண கட்டுப்பாடுகளை அதிகரித்தது இங்கிலாந்து அரசு
x
தினத்தந்தி 15 Jan 2021 6:57 PM GMT (Updated: 15 Jan 2021 6:57 PM GMT)

உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் வரும் திங்கள் கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இன்று 55 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 1,280 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இதனால், அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

உருமாறிய கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பரவியுள்ள பிரேசில், போர்ச்சுகல் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிறநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த கட்டாயத்தனிமைப்படுத்தல் கொரோனா வைரஸ் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு பொறுந்தாது. கொரோனா வைரஸ் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்ற நடைமுறை இருந்துவந்தது.

ஆனால், தற்போது உருமாறிய கொரோனா பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால் இங்கிலாந்தில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் அனைத்துப்பயணிகளுக்கும் கொரோனா இல்லை என்ற கொண்டுவர வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என்ற பழைய நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும்
கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 5 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் முடிவு வர வேண்டும். அவ்வாறு கொரோனா செய்துகொள்ளவில்லை என்றால் அவர்களும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

இந்த நடைமுறை வரும் 18-ம் தேதி (திங்கள் கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. வரும் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த பயண கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவித்துள்ளார்.

Next Story