காங்கோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்; 46 பேர் உயிரிழந்ததாக தகவல்


காங்கோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்; 46 பேர் உயிரிழந்ததாக தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2021 8:53 AM GMT (Updated: 16 Jan 2021 8:53 AM GMT)

காங்கோ நாட்டில் பயங்கரவாதிகல் நடத்திய தாக்குதலில் 46 பொது மக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கின்ஷாசா,

ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கு ஏற்படும் மோதலில் அப்பாவி பொது மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சுமார் 1000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கோவில் உள்ள இருமூ மாகாணத்தில் அபிமீ என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் நேற்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை ஏ.டி.எப். என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகவும், இதில் 46 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story