இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 671 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Jan 2021 5:51 PM GMT (Updated: 17 Jan 2021 5:51 PM GMT)

இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இன்று புதிதாக 38,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 33,95,959 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89,261 ஆக அதிகரித்துள்ளது.   

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

Next Story