தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் பகிருங்கள் - உலக சுகாதார நிறுவனம்


தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் பகிருங்கள் - உலக சுகாதார நிறுவனம்
x
தினத்தந்தி 19 Jan 2021 3:02 PM GMT (Updated: 19 Jan 2021 3:21 PM GMT)

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், சில நாடுகள் தேசியவாதத்தை கடைப்பிடித்து வருவது, உலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தி இருப்பதாக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறி உள்ளா

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், சில நாடுகள் தேசியவாதத்தை கடைப்பிடித்து வருவது, உலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தி இருப்பதாக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் தார்மீக தோல்வியை அடைந்து இருப்பதாகவும், கொரோனா தடுப்பூசியை அனைத்து நாடுகளுக்கும் பகிர வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். 

அதிக வருவாய் ஈட்டும் 49 நாடுகளில், சுமார் 4 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால், ஒரு ஏழை நாட்டில், வெறும் 25 தடுப்பூசிகளே விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

Next Story