2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 27 பேருக்கு மட்டுமே மரணதண்டனை


Photo: Social Media
x
Photo: Social Media
தினத்தந்தி 19 Jan 2021 5:32 PM GMT (Updated: 19 Jan 2021 5:32 PM GMT)

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 27 பேருக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரியாத்

உலகில் கொடுமையான தண்டனை சட்டங்கள் உள்ள நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக சவுதி அரேபியாவில் கடுமையான தண்டனை சட்டங்கள் உள்ளது. எல்லா வருடமும் அதிகமான தூக்கு தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் முக்கியமான இடம் வகிக்கிறது. இங்கு சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் சவுதியில் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் அங்கு சட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 27 பேருக்கு மட்டுமே தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 85 சதவீதம்  குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு கொரோனா பரவல் ஒரு காரணம் என்றாலும் அங்கு சில குற்றங்களுக்கு தண்டனை அளவு குறைக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story