அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்! - ஜோ பைடன் டுவீட்


அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்! - ஜோ பைடன் டுவீட்
x
தினத்தந்தி 20 Jan 2021 3:57 PM GMT (Updated: 20 Jan 2021 3:57 PM GMT)

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி) பதவி ஏற்கிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி) பதவி ஏற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

இந்நிலையில், ஜோ பைடன். தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

 “இது அமெரிக்காவிற்கு புதிய நாள்” என பதவிட்டுள்ளார். மேலும் இன்று, நாங்கள் புதிதாகத் தொடங்குகிறோம். தொடக்க 2021 க்கு டியூன் செய்யுங்கள்.
 
முன்னதாக பதவியை நிறைவு செய்த டிரம்ப், ஜோ பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணித்து விட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

இதனிடையே அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டல் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து  வெள்ளை மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story