உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது + "||" + U.S. Army Soldier Arrested For Attempting To Assist ISIS

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க், 

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ். கடந்த 2019ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் அப்போது முதலே பயங்கரவாதிகளையும் அவர்களின் வன்முறை சித்தாந்தத்தையும் ஊக்குவிக்கும் ஆன்லைன் பிரசாரங்களை ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.‌ இந்த நிலையில் அமெரிக்க மத்திய புலனாய்வு போலீஸ் (எப்.பி.ஐ.) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன்னை ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர் போல சித்தரித்து இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

எப்.பி.ஐ. ஊழியரை உண்மையான ஐ.எஸ். பயங்கரவாதி என நினைத்து ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் இவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.‌ கடந்த அக்டோபர் மாதம் முதல் அவருடன் தொடர்பில் இருந்து வரும் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் அண்மையில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். மேலும் நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் தனது சதித் திட்டம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். அத்துடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ராணுவ ரகசிய தகவல்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து அந்த எப்.பி.ஐ. ஊழியர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜசின் சதித்திட்டம் குறித்து ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.‌

இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - அதிபர் ஜோ பைடன் தகவல்
அமெரிக்காவில் சாதனை அளவாக இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2. ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
4. அமெரிக்காவில் குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து; ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.
5. அமெரிக்காவின் பட்ஜெட் இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு
அமெரிக்க வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது.