அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பதவியேற்ற முதல் நாளிலேயே 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்


Image courtesy : cnn.com
x
Image courtesy : cnn.com
தினத்தந்தி 21 Jan 2021 3:58 PM GMT (Updated: 21 Jan 2021 3:58 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பதவியேற்ற முதல் நாளிலேயே ஜோ பைடன், கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் .

வாஷிங்டன்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார்.

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டு உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஜனாதிபதி டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். 15 புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள அவர், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணையுமென அறிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 17 முக்கிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார் .  இதில் கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். 

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும்  அமெரிக்காவில் வாழும் சுமார் 1.1 கோடி ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை பெறுவதை  எளிதாக்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பிடன் 10 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார்.

தடுப்பூசி துரிதப்படுத்தப்பட்டு சோதனை அதிகரிக்கும். முககவசங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படும்.

Next Story