அமெரிக்காவிடம் இருந்து 50 ‘எப்-35’ போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்து + "||" + UAE signs deal with U.S. to buy 50 F 35 jets and up to 18 drones
அமெரிக்காவிடம் இருந்து 50 ‘எப்-35’ போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்து
அமெரிக்காவிடம் இருந்து 50 ‘எப்-35’ போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்திட்டுள்ளது.
* அமெரிக்காவிடம் இருந்து 50 ‘எப்-35’ போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்திட்டுள்ளது. ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 18 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களையும் அமெரிக்காவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வாங்குவதற்கும் அந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
* ஜப்பானில் சிபா மாகாணத்தில், பறவைக்காய்ச்சல் காரணமாக 12 ஆயிரம் வாத்துகளை கொன்று புதைக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
* அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரோசெஸ்டர் நகருக்கு தெற்கே 17 மைல் தொலைவில், தேசிய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
* தென்கொரியாவில் ஊழலை தடுப்பதற்காக வலிமை வாய்ந்த ஊழல் விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கிம் ஜின் ஊக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகளவில் 52 சதவீதம்பேர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் மலேசியாவில் உலக அளவினை விட அதிகளவில், குறிப்பாக 65 சதவீதத்தினர் வீடுகளில் இருந்து பணியாற்றுவதாக ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
* அமெரிக்காவில் நியாயமான குடியேற்ற கொள்கை இருப்பதை உறுதி செய்யும் வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 100 நாட்கள் வரையில், குடிமக்கள் அல்லாதவர்களை நாடு கடத்துவதை நிறுத்தி வைக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் வருகிற மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.