உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.04 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,
உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,80,34,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,04,31,964 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 97 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,55,04,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,285 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 2,51,78,628, உயிரிழப்பு - 4,19,793, குணமடைந்தோர் -1,50,94,149
இந்தியா - பாதிப்பு- 1,06,25,420, உயிரிழப்பு - 1,53,053, குணமடைந்தோர் -1,02,81,391
பிரேசில் - பாதிப்பு - 86,99,814, உயிரிழப்பு - 2,14,228, குணமடைந்தோர் - 75,80,741
ரஷ்யா - பாதிப்பு - 36,55,839, உயிரிழப்பு - 67,832, குணமடைந்தோர் - 30,54,218
இங்கிலாந்து - பாதிப்பு - 35,43,646, உயிரிழப்பு - 94,580, குணமடைந்தோர் - 15,86,707