தண்ணீர் என்றாலே பயம்...67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர் + "||" + 'World's Dirtiest Man':Amou Haji Is An 87-Year-Old Man Who Hasn't Bathed In 67 Years
தண்ணீர் என்றாலே பயம்...67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்
உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை.
தெஹ்ரான்
உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை.
தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்கு தண்ணீர் என்றாலே பயம்.இதனால், கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை நனைத்ததில்லை. குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்று அமோவ் ஹாஜி நம்புகிறார். இதனால், தண்ணீர் பக்கம் எட்டி பார்க்காததால். உடல் முழுக்க புழுதி படிந்து அழுக்காகவே அமோவ் ஹாஜி காட்சியளிக்கிறார். தன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால் , அமோவ் ஹாஜி தனியாகவே வசிக்கிறார்.
சாம்பல் மற்றும் அழுக்குகளால் நிறைந்த அவரை பார்த்தால் ஒரு சிற்பம் போல் தோற்றமளிக்கிறார்.
அமோவ் ஹாஜியின் உணவு பழக்கமும் வித்தியாசமாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
முள்ளம்பன்றி கறி அமோவ் ஹாஜிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது 87 வயதாகும் அமோவ் ஹாஜிக்கு புகைக்கும் பழக்கமும் உண்டு. அடிக்கடி, தன் உடல் எப்படியிருக்கிறது கார் கண்ணாடிகளில் பார்த்துக் கொள்கிறார். உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது. இவருக்கு யாரும் முடி வெட்ட முன் வராததால் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்கிறார்.
பல ஆண்டுகளாக குளிக்காத ஒரே மனிதர் ஹாஜி மட்டுமல்ல. 1974 இல் திருமணமானவுடன் வாரணாசியைச் சேர்ந்த குரு கைலாஷ் சிங் குளிக்க மறுத்துவிட்டார். கைலாஷ் சிங்கிற்கு தொடர்ந்து ஏழு மகள்கள் பிறந்தனர். ஆண் குழந்தைக்கு அவர் ஆசைபட்டார். அவர் குளிப்பதை நிறுத்தினால் அவருக்கு ஒரு மகன் இருப்பார் என்று சாமியார் ஒருவர் கூறியதையடுத்து அவர் இந்த முடிவுக்கு வந்தார்.
இங்கிலாந்தில் அறிவியல் ஆய்வுகளில் அதிக ஆர்வம் கொண்ட பள்ளி மாணவன் சோதனை முயற்சியாக காந்த கோலிகளை முழுங்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளான்.