மும்பையில் இருந்து பிரேசில் அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி


மும்பையில் இருந்து பிரேசில் அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Jan 2021 10:49 PM GMT (Updated: 22 Jan 2021 10:49 PM GMT)

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

புதுடெல்லி,

உலகிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் இத்தடுப்பூசிக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 விமானங்கள் கொரோனா ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை பிரேசில், மொராக்கோ நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. நேற்று அதிகாலை, அந்த இரு விமானங்களிலும் தலா 20 லட்சம் தடுப்பூசிகள் ஏற்றிச் செல்லப்பட்டதாக மும்பை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றைய தினம் வரை, மும்பை விமான நிலையம் வாயிலாக வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சுமார் ஒன்றரைக் கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  தடுப்பூசி ஏற்றிச்சென்ற விமானம் பிரேசில் வந்தடந்ததை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Next Story