உலக செய்திகள்

புதிய வகை கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன் + "||" + "Some Evidence" UK Coronavirus Strain More Deadly: Boris Johnson

புதிய வகை கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்

புதிய வகை கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர்.
லண்டன்,

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தை உலுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், மறுபுறம் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் பரவலாக ஊகங்கள் வெளியாகின்றன. 

இந்த நிலையில்,  செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போரிஸ் ஜான்சன், “ தென்கிழக்கில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்  அதிக அளவு இறப்பு ஏற்படுத்துவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் உள்ளன” என்றார்.  மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த போரிஸ் ஜாசன், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதாக கூறினார். 

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் சீனா உள்பட சுமார் 60 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.‌ அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.
2. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.
3. 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
4. 3-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்து வீச்சு: 112- ரன்களில் சுருண்டது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112-ரன்களில் ஆல் அவுட் ஆனது.
5. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.