வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்


வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்
x
தினத்தந்தி 23 Jan 2021 7:03 PM GMT (Updated: 23 Jan 2021 7:03 PM GMT)

அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ஜோ பைடனை நியமனம் செய்து இருந்தார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். முன்னதாக அவர் அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை நியமனம் செய்து இருந்தார்.
இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும்.

அதன்படி நேற்று செனட் சபையில் லாயிட் ஆஸ்டின் நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் அவரது நியமனத்துக்கு ஆதரவாக 93 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 2 பேர் மட்டுமே அவரது நியமனத்துக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் லாயிட் ஆஸ்டினை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைத்தது.

இதையடுத்து அவர் விரைவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னிலையில் ராணுவ மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.இதன் மூலம் அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர் என்கிற பெருமையை லாயிட் ஆஸ்டின் பெற உள்ளார். லாயிட் ஆஸ்டினின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஜனாதிபதி ஜோ பைடன் செனட் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story