அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு + "||" + Joe Biden speaks to UK PM Johnson, discusses potential free trade deal
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்பு ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய முதல் ஐரோப்பிய தலைவர் போரிஸ் ஜான்சன் தான் ஆவார்.
ஜோ பைடனுடன் பேசிய பிறகு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தனித்துவமான நட்பை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டதற்காக ஜோ பைடனுக்கு போரிஸ் ஜான்சன் வாழ்த்துக்களையும் தெரிவித்ததாக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்தை போரிஸ் ஜான்சன் வரவேற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.